டைட்டில் பட்டம் வென்ற ஆரிக்கு கிடைத்த வருமானம் இத்தனை கோடியா?

344e696c8bca328c4d6d96cce3055ccd

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வின்னர் ஆரி என்பதும் அவருக்கு பரிசுத் தொகையாக ரூபாய் 50 லட்சம் கிடைத்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஆரிக்கு வின்னருக்காக கிடைத்த பரிசு தொகை ரூ.50 லட்சம் மற்றும் அவருடைய சம்பளத்தை சேர்த்து கோடியில் வருமானம் பெற்று உள்ளது தற்போது தெரிய வந்துள்ளது 

ஆரியின் தினசரி சம்பளம் ரூபாய் 85 ஆயிரம் என்று சமூக வலைதளங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்தன. அதன்படி பார்த்தால் அவருக்கு அவர் 105 நாட்களில் உள்ள சம்பளம் மட்டும் என்பது 89 லட்சத்து 25 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் அவருக்கு வின்னர் பரிசு தொகையாக 50 லட்சத்தையும் சேர்த்தால் ஒரு கோடியே 39 லட்சத்து 25 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

b5151afe79698661454ddad3c2a1702e

அது மட்டுமின்றி பல்வேறு விளம்பரதாரர்கள் அவருக்கு பரிசு தொகையாகவும், பொருளாகவும் கொடுத்ததை சேர்த்தால் அவருக்கு கிடைத்திருக்கும் மொத்த வருமானம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிட்டத்தட்ட இரண்டு கோடியை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறதே

அது மட்டுமின்றி அவருக்கு திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதை அடுத்து அவருக்கு குறைந்தது ஐந்தாறு படங்கள் ஒப்பந்தம் ஆகும் என்றும் அதிலும் அவருக்கு லட்சங்களில் அல்லது கோடியில் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கை பெற்ற ஆரி பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய அளவில் பலன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.