Connect with us

எம்மாடியோ..! குடிக்கும் தண்ணீருக்கு இத்தனை லட்சம் செலவா ?

process aws

News

எம்மாடியோ..! குடிக்கும் தண்ணீருக்கு இத்தனை லட்சம் செலவா ?

எம்மாடியோ..! குடிக்கும் தண்ணீருக்கு இத்தனை லட்சம் செலவா ?

மிக உயர்தர குடிநீரை வாங்க ஒருவர் மாதம் தோறும் 15லட்சம் செலவிடுவதாக டிக்டாக் பிரபலம்  வெளியிட்டுள்ள வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ராயன் என்ற டிக்டாக் பிரபலத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பிடிக்க வில்லையாம். இதனால் இயற்கையான தண்ணீரை பெரும் செலவு செய்து வாங்கி கொண்டு இருக்கிறார்.

இவர் தண்ணீரில் சுத்தம் மட்டும் இல்லாமல் இயற்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் . இதனால் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைக்கும் நிறுவனத்திடம் இருந்து தான் அவற்றை வாங்குகிறார்.

தண்ணீர்  குடித்த பிறகு அந்த பாட்டில்கள் அனைத்தையும் மறுசுழற்சிக்கு ராயன் அனுப்பு வைத்து விடுகிறார். இயற்கை நேசிக்கும் ராயன் வீட்டில் பாட்டில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காகவே நான்கு குளிர்சாதன பெட்டிகள் வைத்துள்ளார். இதற்காக மாதம்தோறும் 2000 அமெரிக்க டாலர்களை செலவு செய்பதாக அவர் கூறியுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 1.5 வரை இருக்கும்.

இதற்கு பல நெட்டிசன்கள் குடிநீருக்காக  இவ்வளவு செலவு செய்வதா என்று கேள்வியெழுப்பினர். இதற்கு பதில் அளித்த ராயன் நான் எப்போதும் தூய்மையான தண்ணீரை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் ஆனால் நீங்கள் எல்லாரும் நரகத்தில் இருப்பதை போல அசுத்தமான தண்ணீரை குடித்து வருகிறீர்கள்.

உங்களைப்போல என்னால் குலாய் தண்ணீரை யெல்லாம் குடிக்க முடியாது. கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே நான் விரும்பி குடிப்பேன். எனக்கான நான் செய்துகொள்ளும் ஒரே விஷயம் அதுமட்டும் தான் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top