இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு?

02d791227ae9d7f06852e4d177f10723

இந்தியாவில் கடந்த மே மாதம் தினசரி 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக படிப்படியாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுமார் 40 ஆயிரம் பேர் தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 39 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 546 பேர் மரணம் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 35,087 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் என்றும் இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,05,03,166 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மரணங்கள் மொத்த எண்ணிக்கை 4,20,016 என்றும், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,13,32,15 என்றும், இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,08,977 என்றும் இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,78,82,261 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment