தகப்பனின் இத்தனை போராட்டத்திற்கும் கிடைத்தது வெற்றி! ஆர்யன் நாளை ரிலீசாக வாய்ப்பு!!

இந்தி, தெலுங்கு, தமிழ் இப்படி அனைத்து சினிமாவிலும் மிகப்பெரிய கால் தடத்தை பதித்தவர் நடிகர் ஷாருக்கான். ஆனால் இவர் சம்பாதித்த அனைத்து பெயர்களை ஒரு கணப்பொழுதில் உடைந்து போகும் அளவிற்கு அவரது மகன் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.ஆரியன் கான்

இந்த நிலையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் கிடைத்ததாக கூறப்படுகிறது. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர் நீதிமன்றம்.

அக்டோபர் 3-ல் கைது செய்யபட்ட ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆரியன் கானிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை, அவர் அதை பயன்படுத்தும் இல்லை எனவும் அவர் தரப்பில் வாதம் நிகழ்த்தப்பட்டது.

ஆர்யன் சார்பில் ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். விசாரணை நீதிமன்றமும், அமர்வு நீதிமன்றமும் ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில் மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு கொண்டுசெல்லப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சாம்ப்ரே நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஆரியன் கானுடன் கைது செய்யப்பட்ட அப்பாஸ் பெர்சென்ட், முன்முன் தமேச்சாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் நாளைய தினம் ஆரியன் கான் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment