Connect with us

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? அதிமுகவுடன் தீவிர பேச்சுவார்த்தை!!

bjp admk 1

செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? அதிமுகவுடன் தீவிர பேச்சுவார்த்தை!!

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? அதிமுகவுடன் தீவிர பேச்சுவார்த்தை!!

நேற்றைய தினமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதன்படியே பாஜக கட்சியின் சார்பில் நேற்று கமலாலயத்தில் ஆலோசனை கூட்டம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் நடைபெற்றது. அதே நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக கட்சியும் ராயபுரத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடத்தியது.

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பலரும் எதிர்பாராத விதமாக அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பதவி பறிக்கப் பட்டதாக காணப்படுகிறது. அதன்படி அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பிலிருந்து நவநீதகிருஷ்ணன் எம்பி விடுவிக்கப்பட்டதாக கட்சியின் தலைமை அறிவித்து இருந்தது.

ஏனென்றால் அவர் திமுக எம்பி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு இருந்ததால், நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் நேற்று தகவல் கிடைத்தது. இந்த சூழலில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக பாஜக இடையே கூட்டணி இருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் உடன் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்துகிறார். பொன்ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top