எத்தனை இடங்களில் திமுக வெற்றி? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கட்சியானது பலமான பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. திமுக  தான் போட்டியிட்ட பல தொகுதிகளில் திமுக  வெற்றி பெற்றுள்ளதாக காணப்படுகிறது.மாநிலத் தேர்தல் ஆணையம்

இந்த நிலையில் தற்போது திமுக எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்று குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி இடத்திலும் திமுக வெற்றி பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

9 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவி இடங்களில் திமுக 6 மற்றும் காங்கிரஸ் இரண்டு, விசிக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. எழுபத்தி நான்கு ஒன்றிய குழு தலைவர் பதவி இடங்களில் திமுக  அறுபத்தி எட்டு இடங்களிலும், அதிமுக ஒரு இடங்களிலும், திமுக ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

74 பதவி இடங்களில் மூன்று இடங்களில் குறைந்த உறுப்பினர்கள் வந்ததால் தேர்தல் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பில் உள்ள குறைபாடு காரணமாக 74 ஒன்றியங்களில் நெமிலியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

74 ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவி இடங்களில் திமுக 62 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், அதிமுக 1 இடங்களிலும், சுயச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment