ஹன்சிகா கைவசம் இத்தனை படங்களா? அதிர்ச்சியில் சக நடிகைகள்….!

திரையுலகில் நடிக்க தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் நடிகைகளுக்கு வாய்ப்புகள் குவியும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அடுத்தடுத்து இளம் நடிகைகள் புதிதாக களமிறங்கினால் பழைய நடிகைகளுக்கான மவுசு குறைவதோடு பட வாய்ப்புகளும் குறைந்து விடும். ஆனால் ஒரு சில நடிகைகள் எப்போதும் அவர்களின் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்கிறார்கள்.

ஹன்சிகா

அந்த வகையில் நடிகை ஹன்சிகா தற்போது வரை கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளாராம். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இதனால் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் இல்லை என கூறப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் இல்லையாம் தற்போது ஹன்சிகா கைவசம் கிட்டத்தட்ட ஒன்பது படங்கள் உள்ளதாம்.

அந்த வரிசையில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி உள்ள மகா படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் மட்டும் ரவுடி பேபி, மை நேம் இஸ் சுருதி, 105 மினிட்ஸ், பார்ட்னர் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறாராம். இதுதவிர ஹாட்ஸ்டார் ஒரிஜினல் மற்றும் வாலு படத்தை இயக்கிய விஜய் சந்துருவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

மேலும், இயக்குனர் ஆர்.கே கண்ணன் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களில் ஹன்சிகா மிகவும் பிசியாக நடித்து வருகிறார். எனவே இந்த ஆண்டு அவர் காட்டில் அடைமழை தான். இத்தனை படங்களில் நடித்து வருவதால் ஹன்சிகா மிகுந்த குஷியில் உள்ளார். ஆனால் சக நடிகைகளோ இவருக்கு மட்டும் எப்படி இத்தனை படங்கள் கிடைத்தது என பொறாமையில் பொங்கி வருகிறார்களாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment