தெலுங்கு மொழியில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா.இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார் .நடிகை ராஷ்மிகா கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் 17 டிசம்பர் 2021 தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக்க்ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.
மேலும் நடிகர் விஜய் சேதுபதியிடம் இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு முக்கிய போலீஸ் உயர் அதிகாரி கதாபாத்திரத்தை உருவாக்கப்பட்டுள்ளதாம்.அதற்காக விஜய் சேதுபதி 35 கோடி சம்பளமாக வங்கயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் மட்டுமல்ல, புஷ்பா இயக்குனர் சுகுமாரும் தனது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுனின் சம்பளம் சுமார் 85 கோடிகள் வரை இருக்கலாம் என தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.
விஷால் நடிப்பில் வெளியான லத்தி படத்தின் டீசர் இதோ!
இந்நிலையில் பிரமாண்ட பொருட்ச்செலவில் வெளியாகும் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்திய மொழிகள் மட்டுமின்றி வெளிநாட்டு மொழிகளில் உருவாக இருப்பதால் இந்த படம் பான்-வேர்ல்ட் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியியாக்கலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.