எம்மாடியோ..! பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னருக்கு இத்தனை லட்சம் பரிசுத் தொகையா ?
ஹாட் ஸ்டாரில் 24 மணிநேரமும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சியினை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகி தற்போது கடந்த சில வாரங்களாக நடிகர் சிம்பு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார்.
சுமார் 70 நாட்கள் நடத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் , நிரூப் நந்தகுமார், ஜூலி மரியானா, அபிராமி வெங்கடாசலம், பாலாஜி முருகதாஸ் மற்றும் தாமரை செல்வி ஆகியோர் பிக்பாஸ் அல்டிமேட்டின் இறுதிப் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இறுதி போட்டியாளர்களாக பாலா, நிரூப், ரம்யா பாண்டியன் ஆகியோர் பைனல்ஸ்க்கு சென்றுள்ளனர்.
இதனிடையே ஹவுஸ் மேட்ஸ்கள் உட்பட ரசிகர்கள் இடத்திலும் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. அந்த வகையில் வின்னராக பாலாவும், ரன்னராக நிரூப் என அறிவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் வின்னரான பாலாவிற்கு ரூ. 20 லட்சம் ரூபாயை பரிசுத் தொகையினை நடிகர் சிம்பு வழங்கினார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
