ஒரே ஆண்டில் இத்தனை படங்களா? பாகுபலி ஹீரோவுக்கு அடித்த ஜாக்பாட்…!

நடிச்சா ஹீரோ தான் என்பதெல்லாம் பழைய டயலாக். இனிமே நடிச்சா பான் இந்தியா படம் தான் என்பது தான் புதிய டயலாக். இந்த டயலாக் வேற யாருக்கும் இல்லைங்க நம்ம பாகுபலி பட ஹீரோ பிரபாஸுக்கு தான். என்னைக்கு பாகுபலி படம் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றதோ அப்போவே பிரபாஸின் மார்க்கெட்டும் உச்சம் தொட்டு விட்டது.

பிரபாஸ்

அவரின் சம்பளம் மட்டும் அதிகமாகவில்லை இனி நடித்தால் பான் இந்தியா படம் தான் என கூறும் அளவிற்கு பிரபாஸின் மார்க்கெட் எகிறியுள்ளது. அதன்படி பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது. இதில் இதர இரண்டு மொழிகளை தவிர ஹிந்தியில் தான் படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் படங்கள் குறைந்தது மூன்று மொழிகளிலாவது வெற்றி பெற்று விடுவதால் எப்படியேனும் கல்லா கட்டி விடுகிறார்கள். அதனால் தான் பிரபாஸ் படத்திற்கு நான் நீ என தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.

தற்போது உள்ள சூழ்நிலையில் படங்களின் வெளியீடு மற்றும் பட வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டாலும், தென்னிந்திய நடிகர்களிலேயே பிரபஸுக்கு மட்டும் அதிக படங்கள் குவிந்து வருவதோடு வெளியீட்டுக்கும் தயாராகி வருகின்றன.
அந்ந வகையில் ராதே ஷ்யாம், ஆதி புருஷ் மற்றும் ஸ்பிரிட் போன்ற பெயரிடப்பட்ட படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.

இதுதவிர இயக்குனர் சித்தார்த் ஆனந்ந் இயக்கத்தில் தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கும் வரு என்ற படத்திலும் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படங்கள் போக இன்னும் 4 புதிய படங்களும் அறிவிப்புக்கு காத்திருக்கின்றன. கொரோனா பரவல் குறைந்தவுடன் ஒவ்வொரு படமாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment