உலக அளவில் ’மாஸ்டர்’ படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி?

99be3b2a2644b8e674bfeb3aa3e27ec4

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 55 கோடி இந்த படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

சென்னையில் மட்டும் ரூபாய் 1.21 கோடி கோடி வசூல் செய்த இந்த படம் தமிழகம் முழுவதும் ரூபாய் 25 கோடி வசூல் செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 9 கோடி வசூல் செய்திருப்பதாகவும், கர்நாடகாவில் ரூ. 3 கோடியும் கேரளாவில் ரூ.3 கோடியும் வெளிநாடுகளில் சுமார் 14 கோடியும் வசூல் செய்திருப்பதாக தெரிகிறது. இன்று வட இந்தியாவில் ‘மாஸ்டர்’ வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

80098369640f62ad94450495f447921d

மேலும் இந்த திரைப்படம் கொரோனா கெடுபிடியிலும்,  50% இருக்கைகள் மட்டுமே அனுமதி என்ற நிலையிலும் உலகம் முழுவதும் ஒரே நாளில் 55 கோடி ஒரு தமிழ் திரைப்படம் வசூல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இன்று முதல் வரும் திங்கள் முதல் விடுமுறை நாள் என்பதால் இந்த விடுமுறை தினங்கள் முடிவதற்குள் ரூ.200 கோடி வசூலை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.