இது தொடர்பாக பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
நடப்பு நிதியாண்டில் பதிவுத் துறையில் ஜனவரி மாதம் வரை ரூ.10,785.44 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 – 2019 ஜனவரி வரை ரூ.8,937.45 கோடியாகவும், 2019 – 2020 ஜனவரி வரை ரூ.9,145.06 கோடியாகவும், கடந்த நிதியாண்டில் ஜனவரி வரை ரூ.7,927.30 கோடியாகவும் வருவாய் இருந்துள்ளதால் கடந்த ஆண்டை விட அதிகம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து மண்டலங்களிலும் பதிவுத்துறை பணி சீராய்வுக் கூட்டங்கள், காணொலி காட்சி மூலம் வாராந்திர கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அரசின் வருவாயை வசூலிக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கட்டாயமாக தணிக்கை இழப்புகளை வசூலிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், பேரிடர் ஏதும் இல்லாத காலத்தில் பெறப்பட்ட வருவாயை விட கடந்த ஜனவரி மாதத்தில் பதிவுத் துறையின் வருவாய் அதிகரித்துள்ளதாக பதிவுத் துறை செயலர் தெரிவித்துள்ளார்.