வாரவாரம் தடுப்பூசி முகாம் நடக்குது-இதுவரை தமிழகத்தில் எத்தனை கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது?

இன்றைய தான் தமிழகத்தில் 22வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஆனால் அடுத்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்த முடியாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் தமிழகத்தில் தவறாமல் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை 9.75 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் இதுவரை 9 கோடியே 75 லட்சத்து ஏழாயிரம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாரம்தோறும் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்களில் மட்டும் இதுவரை 3 கோடியே 65 லட்சத்து ஆயிரத்து 795 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட 33.46 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல் தவணையாக 27 லட்சத்து 6 ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி இரண்டு பேரும், இரண்டாவது தவணையாக 8 லட்சத்து 32 ஆயிரத்து 77 சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 35 ஆயிரம் இடங்களில் மட்டுமே தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் மக்கள் நல்வாழ்வு துறை பணியாளர்களும் ஈடுபட்டுள்ளதால் முகாம்கள் குறைப்பு என்றும் அவர் விளக்கமளித்தார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment