
தமிழகம்
எத்தனை பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது? ஹைகோர்ட் கிளை கேள்வி;
நம் தமிழகத்தில் தற்போது குற்றவியல் வழக்குகள் மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக காணப்படுகிறது. இருப்பினும் கூட பள்ளி மாணவிகள் தற்கொலை பல இடங்களில் தற்கொலை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகளவு தமிழகத்தில் நடைபெற்று வருவது வேதனை அளிப்பதாக காணப்படுகிறது.
இதில் பல இடங்களில் பிரேத பரிசோதனைகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இதுவரை குற்ற வழக்குகளில் எத்தனை பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது? என்று கேள்வி கேட்டனர்.
மேலும் எத்தனை பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர். எத்தனை நாளில் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்படுகின்றன என்பதை இன்னும் மூன்று வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்க என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறினர்.
மதுரை தலைமை குற்றவியல் நடுவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என 2008 ஆம் ஆண்டின் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது, மனு விசாரித்த நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.
