வெளியே செல்ல அனுமதி இல்லை; முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் இவ்வளவு நேரமா சோதனை?
தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக நம் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை வரிசையாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சொந்தமான வீடு, இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.
அதன் அடிப்படையில் இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் தொடர் சோதனை நடைபெற்றது. அதில் 11 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத பணத்தை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் காரியமங்கலத்தில் உள்ள அன்பழகன் வீட்டில் சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு தொடர்பான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நிகழ்த்தி வருகின்றனர். அதேவேளையில் சென்னை நீலாங்கரையில் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் பதினோரு மணி நேரமாக சோதனை நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் 15 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கே.பி அன்பழகன் வீட்டில் உள்ள பணியாளர்கள் உட்பட யாரும் வெளியே செல்ல அனுமதிக்காமல் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
