சிவாஜியின் ஒரு பாட்டை ரெடி பண்ண இத்தனை நாளா? எந்தப்படம்னு பாருங்க…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் என்றாலே எல்லாமே ஆச்சரியம். அதிலும் ஒரு படத்திற்கு மட்டும் பாட்டைத் தயார் செய்ய 21 நாள்கள் ஆகி விட்டதாம். அது என்ன படம் என்று பார்ப்போமா…

எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதாசன் கிட்ட சொல்றாரு. இந்தப்படத்துல வர்ற கதாநாயகன் புலம்பற மாதிரி சீன். இந்த சூழலுக்கு ஒரு பாட்டைப் போடணும். சாதாரணமா வரிகளை எழுதித் தள்ளுற கண்ணதாசன் இந்தப் பாட்டுக்கு யோசிக்கிறாரு. முதல் வரி அவருக்கு பிடிபடவே இல்லை.

எத்தனை தடவை யோசிச்சாலும் அது வசமா வரவே இல்லை. இப்படியே இந்தப் பாட்டுக்கு 21 நாளாச்சு. அது எந்தப் படம்னா சிவாஜியோட புதிய பறவை.

பாட்டு என்னாச்சுன்னு சிவாஜி கேட்கிறார். அதுக்கு நடந்ததை எம்.எஸ்.வி. அவர்கிட்ட சொல்றாரு. 3 பேரும் அமர்ந்து டிஸ்கஸ் பண்றாங்க. சிவாஜி மறுபடியும் அந்த சீனைப் பற்றிப் பேசறாரு. கதாநாயகன் நிம்மதி இல்லாம தவிக்கிறான். அப்போ அவனுக்கு நிம்மதி தான் தேவை. எங்கே நிம்மதி கிடைக்கும்னு தேடுறான்.

Sivaji
Sivaji

அதைக் கேட்டதும் கண்ணதாசனுக்கு உடனே பொறி தட்டுது. ‘எங்கே நிம்மிதி… எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…’ என வரிகளைப் போடுகிறார். கண்ணதாசனுக்கும், விஸ்வநாதனுக்கும் அந்த வரிகள் ரொம்பவே பிடிச்சிருச்சு. உடனே இதைத் தானே இத்தனை நாளும் கேட்டேன்னு எம்எஸ்.வி. சொல்றாரு.

அந்த வகையில் இந்தப் பாட்டுக்கு இசை அமைக்க 21 நாள் ஆகிவிட்டதாம். பாட்டைக் கேட்டதும் இதை எப்படிப் படமாக்குவதுன்னு நினைச்சாங்க. அந்தப் பாட்டுக்கு இதுவரை காணாத வகையில் படம் பிடிக்கணும்னு நினைச்சி எல்லாரும் வேலை செஞ்சாங்க. அதே மாதிரி விஸ்வநாதனும் ரொம்பவே மாஸா இந்தப் பாட்டுக்கு மியூசிக் போட்டுருப்பாரு.

சிவாஜிக்கு இந்தப் பாட்டுல நடிப்பு ரொம்பவே அபாரமாக இருக்கும். ஒளிப்பதிவும் அந்த டார்க் பேக்ரவுண்டுல செமயாகப் பண்ணியிருப்பாங்க. லைட்டிங் எபெக்ட் ரொம்ப மாடர்ன் லுக்குல பண்ணியிருப்பது இந்தப் பாடலுக்கு ஸ்பெஷல்.

இந்தப் பாடலை இப்போது பார்த்தாலும் பிரமிப்பாகத் தான் இருக்கும். சிவாஜியின் நடிப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு அசைவுகளுமே நம்மை ரசிக்க வைக்கும்.

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...