ஊட்டியில் சுற்றுலா தலங்கள் எவ்வளவு நேரம் திறந்திருக்கும்? நாளை முதல் புதிய நேர கட்டுப்பாடு;

கடந்த சில நாட்களாகவே கட்டுப்பாட்டுக்குள் மத்தியில் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். ஏனென்றால் எதிர்பாராத விதமாக இந்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு எப்படி மீண்டும் அதிகரித்தது என்ற குழப்பத்தில் மக்கள் காணப்படுகின்றனர். இதனால் மீண்டும் கட்டுப்பாடுக்குள் மக்கள் பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

இந்த சூழலில் ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில அரசே இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தி வருகிறது. நம் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த சூழலில் நேற்றைய தினம் வேலூர் மாவட்டத்தில் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில பயணிகள் வருவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இவ்வாறு உள்ள நிலையில் மற்றொரு சுற்றுலாத் தலங்களை திறக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த சுற்றுலாத் தலம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மிக சிறப்பு மிக சுற்றுலாத்தலமாக காணப்படுகிறது அதன்படி உதகை சுற்றுலா தளத்தில் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரித்து வரும் நிலையில் உதகையில் நாளை முதல் சுற்றுலாத் தளங்களை பார்வையிட நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே சுற்றுலாத்தலங்கள் திறந்திருக்கும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment