ரங்கஸ்தலம் பட வெற்றிக்கு பிறகு தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய படம் புஷ்பா.
இப்படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் சமந்தா பாடிய ஓ சொல்றியா மாமா என்ற பாடல் புகழ்பெற்றது.
கொரோனா பிரச்சினைகளையும் தென்னக மொழிகளில் வெளியாகி பயங்கர வெற்றியை இப்படம் பெற்றது.
கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து புஷ்பா முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்து படம் வெளியாகி பதினெட்டே நாட்களில் ரூ.219.68 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் புஷ்பா படத்தின் அடுத்த பாகமான புஷ்பா 2 எப்படி இருக்கும் என டுவிட்டரில் ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்தவை
‘புஷ்பா’ மீதான உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி. இதுதான் எங்களை இன்னும் கடினமாக உழைக்கச் செய்யும்.
மேலும், நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம், ‘புஷ்பா 2’ இன்னும் சிறப்பாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருக்கும்”. என்று ராஷ்மிகா கூறியுள்ளார்.