Connect with us

விக்ரம் படத்தின் FDFS எப்படி இருக்கிறது! முதல்பார்வை விமர்சனம்..

vikram 1 2

பொழுதுபோக்கு

விக்ரம் படத்தின் FDFS எப்படி இருக்கிறது! முதல்பார்வை விமர்சனம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

 

Kamal Haasan 1 1

விக்ரம் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தவுடன் அனிருத் அதிலும் பூந்து விளையாடிவிட்டார்.நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளிவருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் ஜூன் 3 இன்று திரைக்கு வந்துள்ளது.அதிகாலை 4 மணிக்கே அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

2022 06 02

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் கண்களுடன் படம் ஆரம்பிக்கும் இன்ட்ரோ டைட்டில் கார்டை வைத்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி ஓப்பனிங்கிற்கே தியேட்டர்களில் விசில் சத்தம் விண்ணை பிளக்கின்றன.

படத்தின் டைட்டில் கார்டு முதல், விஜய்சேதுபதியின் படு பயங்கரமான என்ட்ரி காட்சிகள் வெகுசிறப்பாக அமைந்துள்ளது.சந்தானம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதியை போலீஸார் ஒருவர் கைது செய்து ஆட்டோவில் அழைத்துவர, துப்பாக்கியை வெடிக்க வைத்து அவரை காலி செய்து, அப்படியே கவிழும் ஆட்டோவில் இருந்து சட்டையே இல்லாமல் எழுந்து நடக்கும் மாஸ் ஓப்பனிங் காட்சியையும் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

படத்தில் விஜய்சேதுபதிக்கு ஷிவானி, மகேஸ்வரி மைனா என மூன்று மனைவிகள். வெளிநாட்டுக்கு போதை பொருகள் அனுப்புவதில் கை தேர்ந்தவர்.அமர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி ரோலில் கன கச்சிதமாக நடித்துள்ளார் பஹத் பாசில்.

இந்த படத்தில் கமல் மகனாக காளிதாஸ் நடித்துள்ளார்,போதை பொருள் கடத்தல் கும்பலால் தன் மகன் காளிதாஸ் கொல்லப்பட மகனை வளர்க்க கமல் படும் சிரமங்களுடன், பாச போராட்டத்துடன் மகனை கொன்றவர்களை பழிவாங்கும் தந்தையாக அதிரடியாக களமிறங்கியுள்ளார் கமல்.

vikram 1653459636 1653929861 1653984413

போதைப்பொருள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய கதை தான் இந்த விக்ரம் படத்தின் ஒரு வரிக்கதை. ஆக் ஷன் காட்சிகளில் தூள் படுத்தி இருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு. துப்பாக்கி, கத்தி, பீரங்கி என்று படம் முழுக்க ஒரே சத்தமாக உள்ளது. ஆங்காங்கே இரத்தம் தெறிக்கிறது.

படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும் படம் பார்ப்பவர்களை எரிச்சல் ஏற்படுத்தாமல் வேகமாகவும், விறுவிறுப்பும் படத்தை நகர்த்தி ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கிறது.

2022 06 02 1

விக்ரம் படத்தின் டைட்டில் கார்டில் சிறப்பு தோற்றத்தில் சூர்யாவின் பெயரை பார்த்ததுமே சூர்யா ரசிகர்கள் தியேட்டர்களை அதிர வைத்து கொண்டாடி வருகின்றனர்.அப்படி ஒரு ரோலில் இப்படியொரு பர்ஃபார்மன்ஸை குறைந்த நேரத்தில் கொடுத்து மனதில் இடம் பிடித்துள்ளார்.

மாநாடு படத்தின் வாய்ப்பை இழந்த ஒரே குடும்பத்தை சார்ந்த ஹீரோக்கள்! யாரு அந்த ஹரோக்கள்?

லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்த இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனவு படமாகத்தான் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது, கமலின் விக்ரம் – வெற்றியின் உச்சம்..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top