எடை அதிகமாச்சே…எப்படி குறைக்கறது? கவலையே வேண்டாம்…இதோ இருக்குது ஆரோக்கிய ரெசிபிகள்…!!!

உடல் எடை போட்டவர்கள் எப்படி ஸ்லிம்மா பாடியை டிரிம்மா வச்சிக்கிடறதுன்னு ரொம்பவே மெனக்கிடுவாங்க. அவங்க என்னென்னமோ செஞ்சு பார்ப்பாங்க. ஆனா எதுவும் ஒர்க் அவுட்டாகாது.

நல்லா உடற்பயிற்சி செய்றது அவசியம். ஆனா அதே நேரத்துல உடல் எடையைக் குறைப்பதுல உணவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உணவே மருந்துன்னு நம்ம முன்னோர்கள் சும்மாவா சொன்னாங்க. சரி வாங்க அந்த ஹெல்த்தியான ரெசிபி என்னன்னு பார்ப்போம்.

கேழ்வரகு கூழ்

தேவையான பொருள்கள்

முளைகட்டிய கொள்ளு

mulai kattiya payir 1
mulai kattiya payir

கேரட்,
பீன்ஸ், அவரைக்காய்,
தட்டைப்பயிறு,
சின்ன வெங்காயம்,
இஞ்சி,
பூண்டு,
முருங்கைக்கீரை,
கல் உப்பு (தேவைக்கு),
தண்ணீர் (தேவைக்கு).

எப்படி செய்றது?

வேக வைச்ச கொள்ளு செய்றதுக்கு நாம என்ன செய்யணும்னா
நேற்று காலையே கொள்ளை ஊற வைத்து இரவு வடிகட்டினால் மறுநாள் காலையில் முளைகட்டி இருக்கும். அப்புறமா இதை நல்லா கழுவி எடுத்துட்டு வாழை இலையில் போட்டு வேக வைக்கலாம். துணியில் வேகவைத்தால் கறைபிடித்துக் கொள்ளும். சத்தும் சுவையும் அதிகமாகவே இருக்கும்.

healthy recipe
healthy recipe

இன்னொரு வாணலியை எடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையை விடுங்க. இதில் பொடியா நறுக்கின இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயத்தைப் போடுங்க. நல்லா வதக்குங்க.

அதோடு சேர்த்து கேரட், பீன்ஸ், அவரைக்காய், தட்டைப்பயிறு ஆகியவற்றைப் பொடிதாக நறுக்கி வதக்குங்க. இப்படி வதங்கும்போதே பாதி அளவு வெந்துடும். நமக்கு பிடிச்ச காய்கறியையும் இந்த மாதிரி பயன்படுத்தலாம்.

இப்போ தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்துக்கலாம். தேவைக்கேற்ப கல் உப்பு போட்டு ஒரு தட்டை வைத்து மூடி விடுங்க. தண்ணீர் நல்லா கொதித்ததும் ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை எடுத்து தண்ணீரில் சேருங்க.

இப்போ ஒரு டம்ப்ளர் தண்ணீர் எடுத்து வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றுங்க. அதில் 4 டேபிள் ஸ்பூன் கேழ்வரகு மாவு, மாவை நல்லா கட்டியில்லாம கரைச்சி எடுத்துக்கோங்க.

கரைச்சதும் இந்த கேழ்வரகு மாவைக் கொதிச்சிக்கிட்டு இருக்குற காய்கறி கலவையில ஊற்றுங்க. நல்லா கலந்ததுக்கு அப்புறம் கெட்டியாயிடும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக்கலாம்.

மாவு நல்லா கொதிச்சிடுச்சுனா அதுல உள்ள பச்சை வாசனை போயிடும். அதுவரை கொதிக்க விடுங்க.

அவ்ளோ தான்…இதான் கேழ்வரகு கூழ்…

வேக வச்ச கொள்ளு

தேவையான பொருள்கள்

வேக வைச்ச கொள்ளு

கடலை பருப்பு
கடுகு
உளுந்தம்பருப்பு
சின்ன வெங்காயம்,
இஞ்சி
பூண்டு,
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
மல்லி இழை
தேங்காய் துருவல்

எப்படி செய்றது?

கொள்ளு நல்லா வெந்ததும் அதை தனியா எடுத்துக்கோங்க. ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி அடுப்பில் காயவிடுங்க. அதில் கடுகு சேர்த்து பொரியவிடுங்க. அதோடு கடலைபருப்பு, உளுந்தம்பருப்பும் சேருங்க.

kollu3
kollu3

சின்ன வெங்காயம், பூண்:டு, இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பிலை, மல்லி இழை ஆகியவற்றை பொடியா நறுக்கி எடுங்க. இதுல மல்லி இழையைத் தவிர மற்ற எல்லாத்தையும் நல்லா வதக்குங்க. கொள்ளுங்கறதால இஞ்சி, பூண்டு சேர்த்து தாளிக்கலாம். இது ஜீரணத்திற்கும் ரொம்ப நல்லது. வெங்காயம் நல்லா வதங்கியதும் வேக வைத்த கொள்ளை எடுத்து பாதி அளவு சேர்த்து நல்லா கிளறி விடுங்க.

இதுக்கு தேவையான அளவு பொடி உப்பு, கொத்தமல்லி இலைகள் போட்டு நல்லா கிளறியதும் மூடி போட்டு 3 நிமிஷம் வேகவிடுங்க. இப்போ நல்லா வெந்ததும் தேவைக்கேற்ப தேங்காய்த்துருவலை சேர்த்துக் கிளறி விடுங்க. கொள்ளை அப்படியே வேக வைச்சி சாப்பிடாம முளைக்க வைத்து சாப்பிடுகையில் சத்தும் சுவையும் கூடுதலாக இருக்கும்.

பச்சைக் காய்கறிகளுடன் வேக வைச்ச கொள்ளு

தேவையான பொருள்கள்

வேக வச்ச கொள்ளு
கேரட், சீமை இலந்தை, கோவைக்காய் – பொடிதாக நறுக்கியது
கொத்தமல்லி இழை
மிளகுத் தூள்
உப்பு – தேவைக்கு

எப்படி செய்றது?

green veg kollu
green veg kollu

வேக வைத்த கொள்ளில் மீதமுள்ள பாதிஅளவை ஒரு பாத்திரத்தில் போடுங்க. அது கூட நறுக்கிய கேரட், பொடியா நறுக்கின சீமை இலந்தை, பொடியா நறுக்கின கோவைக்காய், அதோட கொஞ்சம் உப்பு, கொத்தமல்லி இழைகள், கொஞ்சம் மிளகு தூள் சேருங்க.

இப்போது நாம் கேழ்வரகு கூழ், தாளிச்ச கொள்ளு, பச்சைக்காய்கறிகளோட கலந்த கொள்ளு ஆகியவற்றை செய்து இருக்கிறோம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews