எந்த நோயும் வராமல் இருக்க இன்றே இப்போதே செய்து சாப்பிடுங்க……வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்…!

நோய் எதிர்ப்பாற்றலுக்கு நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து தேவை. எலுமிச்சை, பூண்டு, மஞ்சள், முட்டை, பழவகைகள், ஆரஞ்சு, நெல்லிக்காய், நார்த்தேங்காய், பேரீச்சை,  தேங்காய், சின்ன வெங்காயம், பெரிய நெல்லிக்காய், பாதாம், பிஸ்தா இவற்றை சாப்பிட்டால் ரொம்ப நல்லது.

இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிளகு ரொம்பவே அத்தியாவசியமானது. முட்டையில் மிளகு, சீரகத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.

Spicy egg
Spicy egg

இங்கு நாம் தயாரிப்பது இயற்கையான பொருள். எவ்வித கலப்படமும் இல்லாதது. நோய் எதிர்ப்பு சக்தி வரும்போது நம்மால் எத்தகைய நோயையும் தாங்கக்கூடிய சக்தி வரும். நோய் எதிர்ப்பாற்றல் உடலில் இருப்பதால் நமக்கு எவ்வித நோயும் வராது.

எப்படி செய்வது?

ஒரு வாணலியை சூடுபடுத்துங்க. அதில் 6 டீஸ்பூன் அளவு சோம்பு சேருங்க. 3 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை, 3 டேபிள் ஸ்பூன் சீரகம், 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய், ஒன்றரை டேபிள் ஸ்பூன் மிளகு, 12 இலவங்கம் இவற்றை எல்லாம் சேர்த்து மிதனமான சூட்டில் வறுக்கவும். 2 நிமிஷத்துக்கு அப்புறமா சின்ன துண்டு சிலோன் பட்டை சேர்த்து ஒரு நிமிஷம் நல்லா வறுங்க.

Immunity powder making
Immunity powder making

அப்புறம் ஆற விடுங்க. இப்போ மிக்சி ஜார்ல போட்டு நல்லா அரைங்க. அப்புறம் பவுடரானதும் அது கூட 5 டேபிள் ஸ்பூன் அளவு மஞ்சள் பொடி சேருங்க. அது கூட ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சுக்குத் தூள் சேருங்க. திரும்பவும் மிக்சில போட்டு நல்லா அரைங்க. இப்போ நல்லா வாசனை வரும். 6 மாசம் வரைக்கும் இதைக் கெடாமல் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

Immunity powder2
Immunity powder2

இதை டப்பாவில் போட்டு வைப்பதற்கு முன் நல்லா ஆற விடுங்க. அப்புறமா டப்பாவுல போடுங்க. இதுலருந்து ஒரு அரை டீஸ்பூன் எடுத்து டீ அல்லது ஒரு டம்ளர் சுடுதண்ணீர் அல்லது ஒரு டீஸ்பூன் தேன் அல்லது நெய் கலந்து குடிக்கலாம். வெறும் வயிற்றில் குடித்தால் ரொம்ப நல்லது. சிறு குழந்தைகள் என்றால் கால் டீஸ்பூன் போதும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews