சுவையான… சூப்பரான… கலவையான… ரெசிபிக்கள் செய்யலாம்…வாங்க..!

தினமும் நாம் சாப்பிடுகிறோம். வேலை செய்கிறோம். தூங்குகிறோம். ஆனால் நம் உடம்பைக் கவனிக்கிறோமா என்றால் அதற்கெல்லாம் எங்கே நேரம் உள்ளது என்கிறோம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அது போல தான் நம் உடம்பும். உடலை உறுதியாக நாம் தினமும் பேணிப்பாதுகாத்து வர வேண்டும்.

நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தானே நம்மால் அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்ய முடியும். உணவே மருந்து என்று சித்தர்கள் சொல்வார்கள். அதனால் நாம் சத்தான ஆரோக்கியமான உணவுகளைத் தினமும் ஏதாவது ஒரு வகையில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் சில ஆரோக்கியமான ரெசிபிகள் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பூந்தி தயிர்வடை

Poonthi thayir vadai
Poonthi thayir vadai

தேவையான பொருள்கள்:

உளுத்தம்பருப்பு – 250 கிராம்,
புளிப்பு இல்லாத தயிர் – அரை லிட்டர்,
பச்சை மிளகாய் – 3,
நறுக்கிய கொத்தமல்லி, கேரட் துருவல் – தலா 2 டீஸ்பூன்,
காராபூந்தி – 100 கிராம்,
எண்ணெய் – 500 மில்லி,
உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது?

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து தண்ணீரை வடிகட்டுங்க. அப்புறமா உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைச்சிக்கோங்க. வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு எடுங்க.

வடைகளை வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து, தயிரில் போடுங்க. நன்கு ஊறியதும், மேலே பூந்தி, கேரட் துருவல், கொத்தமல்லி தூவுங்க. அவ்ளோ தான்..பூந்தி தயிர் வடை தயார்.

அவல் சர்க்கரை புட்டு

Aval sweet Puttu
Aval sweet Puttu

தேவையான பொருள்கள்:

கெட்டி அவல் – 250 கிராம்,
நெய் – 4 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
முந்திரிப் பருப்பு – 10,
சர்க்கரை – 200 கிராம்.

எப்படி செய்வது?

அவலை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடித்து எடுங்க. சர்க்கரையை பொடித்து அதனுடன் சேருங்க.

மீதமுள்ள நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சாப்பிடக் கொடுங்க. இப்போ அவல் சர்க்கரை புட்டு ரெடி.

எள்ளு சாதம்

Ellu satham
Ellu satham

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி – 250 கிராம்,
எள்ளு – 25 கிராம்,
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2,
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது?

அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கிடுங்க. எள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை வறுத்துப் பொடித்து, சாதத்தில் சேர்த்து… நல்லெண்ணெய், உப்பு சேர்த்து நல்லா கலக்குங்க. அவ்ளொ தாங்க. இது தான் எள்ளு சாதம். சுவையுடன் மணமும் சேர்ந்து சாப்பிட ரொம்ப நல்லாருக்கும்.

தாளிப்பு தயிர் சுண்டல்

தேவையான பொருள்கள்:

முளைகட்டிய கொண்டைக்கடலை – ஒரு கப்,
முளைகட்டிய பச்சைப் பயறு – ஒரு கப், பொடியாக நறுக்கிய பேபிகார்ன் – ஒரு கப்,
கேரட் துருவல் – ஒரு கப்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், சுத்தம் செய்து நறுக்கிய இஞ்சி – சிறிதளவு,
கடுகு – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
தயிர் (புளிப்பு இல்லாதது) – 200 மில்லி,
உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது?

பயறு, கொண்டைக்கடலையை வேக வைங்க. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, இஞ்சி தாளித்து, கேரட் துருவலை சேருங்க. இதை தயிரில் போட்டு, உப்பு சேர்த்து… வேக வைத்த பயறு, கொண்டைக்கடலை, வதக்கிய பேபிகார்ன், மிளகுத்தூள் சேர்த்து 30 நிமிடம் அப்படியே வைங்க. பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலையை மேலே தூவி சாப்பிடக் கொடுங்க.

ருசியுடன் சத்தும் மிகுந்த இந்த தாளிப்பு சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

வாழைப்பழ அல்வா

Banana Halwa
Banana Halwa

தேவையான பொருள்கள்:

வாழைப்பழம் – 4,
சர்க்கரை – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப் பருப்பு, கேசரி பவுடர் – சிறிதளவு, நெய் – 100 மில்லி.

செய்முறை: வாழைப்பழத்தை நெய் சேர்த்து வதக்கி, நன்கு மசித்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாக கிளறி… வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

தேங்காய் சாதம்

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி – 250 கிராம்,
தேங்காய் துருவல் – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – 2 டீஸூன்,
பச்சை மிளகாய் –ஒன்று,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
முந்திரி – 10,
நெய் – 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய் எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது?

அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்குங்க. தேங்காய் துருவலை எண்ணெய் விட்டு வறுத்துக்கோங்க. சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை தாளிச்சிடுங்க.

சாதத்தை அகலமான பாத் திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து, வறுத்த தேங்காய், தாளித்தது ஆகியவற்றை சேர்த்து நல்லா கலக்குங்க. பிறகு, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சேருங்க. இதில் வறுத்த வேர்க்கடலையும் சேர்த்தா ரொம்ப ருசியா இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.