உங்களைப் பற்றி நீங்கள் அறிய உதவும் உன்னதமான விளக்கு இது…! எப்படி ஏற்றுவது…?

மனிதர்களின் உன்னதமான ஆற்றல் எது என்றால் அது அவரவர் ஆன்மாவை உணரக்கூடிய ஆற்றல் தான். இதை உணர்த்துவதற்காகவே நமக்கு உதவுகிறது ஆத்ம விளக்கு. அதைப்பற்றியும் அதை எப்படி ஏற்றுவது என்பது பற்றியும் இப்போது பார்க்கலாம்.

விளக்கு என்றாலே சுடர்விடக்கூடியது. ஒளிக்காக ஏற்றுவது. பல விளக்குகள் இருந்தாலும் ஆத்ம விளக்கு சிறப்பு வாய்ந்தது. ஒரு விளக்கு நம் ஆத்மாவை அறிந்து கொள்ளக்கூடிய சூழலை ஏற்படுத்தும். அது எப்படி என்று நீங்கள் ஆச்சரியமாகக் கேட்கலாம்.

நம் உடலை ஒரு விளக்காக எண்ணிப் பார்த்தால் அந்தவிளக்கையும் ஆத்ம விளக்கையும் ஒப்பிட்டுப் பார்த்து நமது ஒற்றுமையை அறிந்து கொள்ள முடியும்.

  விளக்கைப் பிளந்து விளக்கினை யேற்றி
       விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
   விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான் கழல் னேவலுவாமே..!

என்ற திருமூலர் எழுதிய திருமந்திரப்பாடல் நமது ஆத்ம விளக்கைப் பற்றித் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

முதல் வரியில் 2 விளக்குகளை சொல்கிறார். ஒன்று வெளியில் உள்ளது. இன்னொன்று உள்ளே உள்ளது. நமது அகத்தைத் திறந்து அதற்குள் சுடர்விடக்கூடிய ஆன்மஜோதி என்ற விளக்கை ஏற்ற வேண்டும் என்கிறார்.

அடுத்த வரியில் அந்த ஆன்ம விளக்கை அவ்வப்போது அணையாமல் சுடர் விட்டு எரியும்படி நமது ஞானம், ஆகாரத்தினால் தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்து இப்படி யார் ஒருவர் அவ்வாறு விளக்கைத் தூண்ட முடியுமோ அப்பேர்ப்பட்டவர்க்கு அருட்பெருஞ்சோதியாக இருக்கக்கூடிய எம்பெருமானின் திருவடி நமக்குக் கிடைக்கும் என்று நிறைவு செய்கிறார் திருமூலர்.

அணுவைப் பற்றிக்கூட மிக அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் திருமூலர். நமது ஆதாரங்கள் மூலம் நாம் எப்படி ஞானத்தை அடைய வேண்டும் என்ற யோக நிலையையும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.

ஒவ்வொருவர் உடலுக்குள்ளும் ஆத்ம ஜோதி உள்ளது. அதை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளார்.

7 wheels
7 wheels

நமது ஆதாரங்கள் மூலம் எப்படி ஞானத்தை அடைய வேண்டும் என்று யோக நிலையையும் அடைய கற்றுக் கொடுத்துள்ளார். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாதகம், விசுத்தி, ஆக்ஞை என 6 சக்கரங்களையும் கடந்து  சகஸ்ரஹாரத்தை அடையும்போது அது பரம்பொருளை  அடைந்து ஞானச்சுடராக ஒளிர்விடும்.

உடலை மையப்பகுதியான நடுத்தண்டு மூலம் தான் ஆத்ம ஒளியேற்றி நமது சகஸ்ரஹாரத்தைத் திறக்க முடியும். இதை நமக்குக் காட்டுவது ஆத்ம விளக்கு. இதன் திரி நடுப்பக்கத்தில் தான் இருக்கும்.

மையத்தில் இருந்து சுடர் விடும் இந்தவிளக்கு. இது ஆன்மாவைக் குறிக்கிறது. இது தான் ஆத்ம விளக்கு. நடுவில் திரி போட்டு எரிந்தாலே அது ஆத்மவிளக்கு தான்.

ஒவ்வொரு விளக்கும் ஏற்றும் திசைகளுக்கு என்று ஒரு பலன் உண்டு. இந்தப் பலன்கள் எல்லாம் ஒன்றாகக் கிடைக்கச் செய்வது தான் இந்த ஆத்ம விளக்கு. இதற்கு திசை கிடையாது. பூஜை அறையில் ஏற்றலாம்.

Aathma Vilakku2
Aathma Vilakku2

வீட்டில் எப்போதும் 2 தீபம் வைத்து ஏற்ற வேண்டும். காமாட்சி விளக்கும், ஆத்ம விளக்கும் வைக்கலாம். தியானக்கூடங்களில் இந்த விளக்கை அதிகமாக ஏற்றுவர்.

இந்த விளக்கை ரொம்ப சன்னமாக வைத்து எரிய விட வேண்டும். இதற்குக் கொஞ்சமாகத் தான் எண்ணை விட வேண்டும். இதை வைத்து நாம் தியானம் செய்தால் ரொம்ப அற்புதமாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews