செல்வ வளம் சேர்க்கும் வழிபாடு: தை அமாவாசையில் இருந்து மறக்காமல் நீங்க கடைபிடிக்க வேண்டிய விஷயம் இதுதான்…!

அமாவாசையில் விரதம் இருக்கும் போது நமக்கு முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும். இந்த நாளில் நாம் மறைந்த முன்னோர்களுக்கு தவறாமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பித்ருகளின் வழிபாடு எந்த வீட்டில் செய்கிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் கிடைக்கும்.

தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசைகள் தான் பெரிய அமாவாசை. இந்த நாள்களில் மற்ற நாள்களை விட நமது மறைந்த முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

Amavasai
Amavasai

மற்ற நாள்களை விட நமது குல தெய்வ அருளைப் பெறவும், பித்ருகளின் ஆசிர்வாதத்தைப் பெறவும், மகாலெட்சுமியின் அருளைப் பெறவும் இந்த நாள் உகந்த நாள். கண் திருஷ்டியைப் போக்கும் முக்கிய நாள் இது. 21.1.2023 (சனிக்கிழமை) அன்று இந்த அமாவாசை வருகிறது.

ஒரு முக்கியமான தீபம் வீட்டில் ஏற்றுவதன் மூலம் பல நன்மைகள் உண்டாகும். சந்தோஷம் வீட்டில் அதிகரிக்கும். தேவையற்ற கடன் தொல்லை, ஆரோக்கிய குறைவு போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

தீபம் ஏற்றுவது எப்படி?

கோடீஸ்வர வாழ்க்கை வாழ்வதற்கு சமமான ஒரு வாழ்க்கையை இந்தத் தீபத்தை ஏற்றுவதன் மூலம் பெறலாம்.

உங்க வீட்டு மொட்டை மாடி, பால்கனியில் ஏற்றலாம். வீட்டுக்கு வெளியிலும் தரையில் ஏற்றலாம். அமாவாசை இருட்டு அதன் மேல் படணும். இந்த ஒளி அங்கு போய் பிரகாசிக்க வேண்டும்.

தண்ணீர் தெளிச்சி அந்த இடத்தை சுத்தமாக வைத்துக்கோங்க. நாலு குத்து பச்சரிசியை பரப்பி வைங்க. அதன் மேல் அகல்விளக்கு வைத்து இந்தத் தீபத்தை ஏற்றணும். 4 திசைக்கு ஏற்ப அகல்விளக்கு பச்சரிசியின் மேல் வைத்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றுங்க. இந்தத் தீபங்களைக் கிழக்குப் பக்கமாக ஏற்ற வேண்டும்.

Theebam
Theebam

இப்போது ஒவ்வொரு தீபத்தின் பக்கத்திலும் ஒரு ரூபாய் நாணயங்களை வைக்கணும்.

குறைந்தது ஒரு மணி நேரமாவது இந்தத் தீபம் எரியணும். அதுக்கு ஏற்ற மாதிரி இந்தத் தீபத்தை ஏற்றுங்க. அதை அன்று இரவு முழுவதும் விளக்கைப் பால்கனியிலேயே வைத்து விடுங்க. மறுநாள் காலை எழுந்ததும் விளக்கை எடுத்துவிட்டு பச்சரிசியையும் தனியாக எடுத்துக் காக்கை, குருவிகளுக்கு உணவாக வெச்சிடுங்க.

ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து ஒரு சிகப்புக் கலரில் பட்டுத் துணியில் போட்டுக் கட்டி வீட்டில் பணம் வைக்கும் இடங்களில் வைத்து விடுங்க. அல்லது சிகப்புத் துணியில் காட்டன் துணி இருந்தாலும் அதில் நாணயங்களைப் போட்டு முடிச்சிப் போட்டு வைங்க.

அடுத்த அமாவாசை வரை அந்த பணமுடிப்பு அங்கேயே இருக்கட்டும்.

இந்த நாணயங்களை எடுத்து சுபச்செலவுகளுக்குப் பயன்படுத்தலாம். அல்லது கோவில் உண்டியலிலோ, அன்னதானத்திற்கோ சேர்த்துக் கொடுக்கலாம்.

Agal
Agal

தொடர்ந்து மாதந்தோறும் வரும் 7 அமாவாசைகளிலும் இதை நீங்கள் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த அமாவாசை தீபத்திற்கு ஒவ்வொரு தடவையும் புதிய பச்சரிசி, நாணயங்களை வைத்து நெய் தீபம் ஏற்றி கடைபிடிங்க. ஒவ்வொரு தடவையும் நாணயங்களை முடிந்து வைங்க.

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews