கண் நோய் உள்ளவர்களா? அப்படின்னா கட்டாயமாக ஆவணி ஞாயிறு விரதத்தைக் கடைபிடிங்க…

ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் கண் நோய்கள் குணமாகும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. அதே போல் செல்வ வளம், பித்ரு தோஷமும் நீங்கும். சூரியன் ஒளி தரும் கடவுள் என்பதால் கண்ணில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கண்டிப்பா செய்யுங்க. சூரியனை வணங்குபவர்களுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், கண்நோய்கள், மஞ்சள் காமாலை, தோல்நோய்கள் போன்ற நோய்களும் குணமாகும்.

ஏழரைச்சனி, ஜென்மச்சனி, அஷ்டமச்சனி போன்ற பாதிப்புகளும் சூரியனை வழிபடுவதால் நீங்கும். சூரிய திசை, சூரிய புத்தியால் உண்டாகக்கூடிய தோஷங்களும் நீங்கும். நவக்கிரக தோஷத்தால் பாதிப்பு அடைந்தவர்களும் சூரியனை இந்த நாளில் வழிபாடு செய்யலாம். ஆவணி மாதத்தில சூரியன் சிம்ம வீட்டுல ஆட்சி செய்யுறாரு. சூரியனுக்கு இது பலமான வீடு. நமக்கு ஆத்ம பலத்தைத் தருபவரும் இவர் தான்.

sun
sun

ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் என்பது ரொம்ப ரொம்ப விசேஷமானது. ஏன்னா ஞாயிறு என்றாலே சூரியனைத் தான் குறிக்கும். பொதுவாகவே ஆவணி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஓரை தான் இருக்கும். ஆன்மிக அறிவுக்கும், தேக நலனுக்கும் சூரிய நமஸ்காரம் தான் கைகொடுக்கும். சூரிய நமஸ்காரப் பயிற்சியை செய்ய ஆரம்பிப்பவர்கள் இந்த நாளில் தொடங்கலாம்.

மருத்துவ ஜோதிடமோ சூரியன் லக்கனத்தில் அமைவது கண்களைப் பாதிக்கும் என்கிறது. சூரியன் மேஷ லக்கனத்தில் உச்சம் பெற்று இருந்ததுன்னு சொன்னா கண்களில் எரிச்சல் ஏற்படும். மேஷம் செவ்வாயோட வீடுங்கறதால கண்களில் உஷ்ணத்தால் எரிச்சல் வரும். சூரியன் சிம்மலக்கனத்தில் ஆட்சி பெற்று இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும் என்கிறது ஜோதிடம்.

சூரியன் கடக லக்கனத்தில் இருந்தால் கண்களில் பீழையும், நீரும் வடியும். கண்புரையும் ஏற்படும். சூரியன் துலாம் லக்கனத்தில் நீசம் பெற்று இருந்தால் பார்வை இழப்பே ஏற்படுமாம். சூரியனும் சந்திரனும் இணைந்து 2ம் வீட்டில் இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும். இதுபோன்ற ஜாதகம் கொண்டவர்கள் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் கண் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.

sooriya namaskaram
sooriya namaskaram

இன்று அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பது அவசியம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமானால் ராகு கேதுவான நாகர் சிலைக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்ய விரைவிலேயே வேலை கிடைக்கும். அந்தக்காலத்தில் உள்ள பெண்கள் நாகரோட புற்றுவில் பாலை ஊற்றி வழிபாடு செய்வாங்க. இதனால நாகதோஷம் நீங்கும். அதுமட்டுமல்லாமல் விஷ ஜந்துகளிடம் இருந்து ஒரு பாதுகாப்பும் கிடைக்கும்.

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் நீச்சம் பெற்று இருந்தால் கண் தொடர்பான பிரச்சனைகள் கண்டிப்பாக இருக்கும். அதே போல் தந்தை இல்லாதவர்களும் இந்த விரதத்தைக் கடைபிடிக்க வாழ்வில் செழிப்பு உண்டாகும். சனி பகவானின் பாதிப்பும் குறைகிறது.

இன்றைய நாளில் எப்படி விரதம் இருப்பது என்பது அனைவரும் கேட்கும் கேள்வி. இந்த நாளில் அசைவ உணவுகள் எடுத்துக்ககாம திரவ உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல காலையில் இருந்து மாலை வரை சூரியனை வழிபாடு செய்ய வேண்டும். காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஓரை தான் இருக்கும்.

sooriyan 2
sooriyan 2

இந்த நேரத்தில் நாம் சூரியனை நினைத்து என்ன வேண்டி வழிபட்டாலும் அது நடந்துவிடும் என்பது ஐதீகம். ஆவணி ஞாயிறு நாம் காலையில் குளித்ததும் சூரியன் உதயமாகும் கிழக்குத் திசையில் நின்று சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய மந்திரங்கள், சூரிய காயத்ரி மந்திரங்கள் எல்லாம் சொல்லி செய்வது சிறப்பு.

அதே போல் ஆதித்ய ஹ்ருதயத்தையும் நாம் வாசித்தால் ரொம்பவே நல்லது. சூரிய நமஸ்காரம் செய்ததும் கோவிலுக்குச் சென்று சூரிய பகவானுக்கு செந்தாமரை மலர்களால் அர்ச்சனை பண்ணுங்க. கோதுமையால செஞ்ச இனிப்பு வகைகளை நைவேத்தியமா செய்யுங்க. கோதுமையை வாங்கி ஏழை எளிய மக்களுக்குத் தானமும் செய்யலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews