பழங்கள் மற்றும் பழச்சாறு எவ்வாறு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்?

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை. எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.

சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு, நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் ரகசியம் கிடைத்துவிடும்.

juice

பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, புதிதான பழச்சாறுகளையே அருந்தலாம். டின், பாக்கட் மற்றும் பாட்டில் பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளை எடுத்து கொள்ளவே கூடாது.

சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்கக்கூடாது. பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் எடுத்து கொள்ளவே கூடாது. ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது விரைவில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.

ரோட்டோர டீ கடைகளில் கிடைக்கும் மைசூர் போண்டாவின் ரெசிபி வேண்டுமா? இதோ!

பழங்களை சமைக்கும் போது அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடுகின்றனர். உங்களுக்கு அதனுடைய சுவை மட்டுமே கிடைக்கிறது. மேலும் பழச்சாறு சாறு எடுத்துக்கொள்வதை காட்டிலும், பழங்களை முழுதாகச் சாப்பிடும் போது தான் நமக்கு மிகுந்த பலனை தருகிறது.

பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும். ஏனென்றால், பழச்சாறு வாயிலிந்து உள்ளே செல்வதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின்னர் உள்ளே அனுப்பவும். இது பழச்சாறு குடிப்பதில் உள்ள முக்கியமான அம்சம்.

உடல் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சுரைக்காய் தயிர் குழம்பு!

உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும் ஒரு வழி இருக்கிறது. அதாவது 3 நாட்கள் உணவிற்கு பதிலாக பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும், அதைத்தவிர புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளை வேண்டும் என்றால்எடுத்துக்கொள்ளலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment