தென்மையான சிலைகளை விற்க முயன்ற பாஜக நிர்வாகி சிக்கியது எப்படி?
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர். இவர் பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளரான முதுகுளத்துாரை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் என்பவர், சட்ட விரோதமாக தொன்மையான சாமி சிலைகளை விற்க முயற்சி செய்வதாக, மதுரை சிலை தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவுப்பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அலெக்ஸாண்டரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அலெக்சாண்டரிடம் 7 சிலைகள் இருப்பது தெரியவந்தது.
இதனை அருப்புக்கோட்டை காவலர் இளங்குமரன் மற்றும் விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி ஆகிய இருவரும் தன்னிடம் சிலையை விற்பனை செய்வதற்காக கொடுத்தாக அவர் கூறினார்.
இதனையடுத்து காவலர் இளங்குமரன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை தனிப்படையினர் கைது விசாரணை நடத்தியதில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலரான நாகநரேந்திரன், விருதுநகரை சேர்ந்த கணேசன் மற்றும் கருப்பசாமி ஆகிய 4 பேரும் எடப்பாடி சென்றதாக கூறினார்கள்.
அங்கு சென்று நாங்கள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் என்று கூறி மிரட்டி 7 உலோக சிலைகளை எடுத்து வந்தது விசாரணையில் அம்பலமானது.
மேலும், ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ், விருதுநகரை சேர்ந்த கணேசன் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
