Connect with us

வாழ்க்கையிலயே தோத்துட்டாரு இவரு எப்படி சினிமால ஜெயிப்பாரு? தனுஷை விமர்சித்த தயாரிப்பாளர்….!

k.rajan 1

பொழுதுபோக்கு

வாழ்க்கையிலயே தோத்துட்டாரு இவரு எப்படி சினிமால ஜெயிப்பாரு? தனுஷை விமர்சித்த தயாரிப்பாளர்….!

வாழ்க்கையிலயே தோத்துட்டாரு இவரு எப்படி சினிமால ஜெயிப்பாரு? தனுஷை விமர்சித்த தயாரிப்பாளர்….!

சாதாரணமாக ஒருவர் விவாகரத்து செய்து கொண்டால் அது விவாதிக்கும் அளவிற்கு பேசு பொருளாக மாறாது. ஆனால் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ விவாகரத்து செய்தால் ஏதோ கொலை குத்தம் செய்தது போல் பலரும் அதை விமர்சனம் செய்வதோடு, மிகப்பெரிய விவாதமாகவும் மாற்றி விடுவார்கள்.

dhanush aishwarya

அந்த வகையில் சமீபத்தில் தனது விவாகரத்தை அறிவித்த நடிகர் தனுஷை தற்போது வரை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், கே.ராஜன் என்ற பிரபல தயாரிப்பாளரும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “காதல் திருமணம் செய்த நடிகர் தனுஷ் 18 வருடங்களுக்கு பின், இவ்வாறு ஒரு முடிவை எடுத்திருக்கக் கூடாது. எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அவர்களின் பிள்ளைகளுக்காக விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். தனுஷின் இந்த முடிவு அவரின் திரையுலக வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சொந்த வாழ்க்கையிலேயே சரியாக இருக்க முடியாத தனுஷ் திரையுலகில் எவ்வாறு ஹீரோவாக சாதிக்க முடியும்? நடிகர்களின் வாழ்க்கை முறையைத்தான் அவர்களின் ரசிகர்களும் பின்பற்றுவார்கள். தனுஷ் குறித்து பல வதந்திகள் வந்தாலும், அவர் தன் பொறுப்பை விட்டு வெளியேறுவது சரி கிடையாது.

மேலும் தமிழ் திரையுலகில் தனுஷ் இந்த உயரத்திற்கு வருவதற்கு ரஜினிகாந்தின் மருமகன் என்பதும் முக்கிய காரணம். அதனை தூக்கி எறிய துணிந்த தனுஷுக்கு திரையுலக வாழ்க்கை நிச்சயம் கேள்விக்குறியாக மாறும்” என மிகவும் கடுமையாக விமர்சனம் கூறியுள்ளார். இருப்பினும் தனுஷ் ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top