Connect with us

இப்படி அரசியலாக்கினால் எப்படி.? தமிழிசை ஆதங்கம்…

தமிழிசை சவுந்தரராஜன்

செய்திகள்

இப்படி அரசியலாக்கினால் எப்படி.? தமிழிசை ஆதங்கம்…

இப்படி அரசியலாக்கினால் எப்படி.? தமிழிசை ஆதங்கம்…

ஆளுநரின் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த தேநீர் விருந்தை காங்கிரஸ், திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புறக்கணித்தனர். இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதோடு பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி துணைநிலை  ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது.

ஆளுநரின் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இது தமிழ் பண்பாட்டிற்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ளார்.

அனைத்திலும் அரசியலை புகுத்தினால் யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது என புதுச்சேரி துணைநிலை  ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top