உங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுமா? அப்படின்னா இந்த ஆடி மாதம் கட்டாயமாக இதைச் செய்யுங்க…!

ஆடி மாதம் பக்தர்களுக்கு எப்போதுமே சிறப்பான மாதம் தான். அம்மனுக்கு உகந்த மாதம். எங்கெங்கும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கூழ் காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்குவார்கள்.

அம்பாள் என்றாலே மங்களகரமானவள். மங்களகரமான எந்த ஒரு செயலைத் தொடங்க வேண்டும் என்றாலும் முதலில் வாங்கும் பொருள் மஞ்சள் தான். இன்று மஞ்சள் பூசிக் குளிப்பது குறைந்து வருகிறது. இது நவநாகரீகம் என்பதால் பெண்கள் மஞ்சளாக முகம் வந்துவிடுமோ என்று பூசத் தயங்குகின்றனர். ஆனால் இது தான் ஆரோக்கியம் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்;கள்.

கல்யாணம் ஆகணும்னு வீட்டில் பையனோ பொண்ணோ இருந்தால் ஆடி மாதம் இதைக் கட்டாயமாக நீங்க செய்யுங்க. அதுவும் செவ்வாய்க்கிழமை இதை செய்து வரலாம்.

kundu manjal horz
kundu manjal-pachai payaru

தேய்த்துக் குளிக்கிற குண்டு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், பூலான்கிழங்கு, பச்சைப்பயறு, கடலைப்பருப்பு இவை எல்லாவற்றையும் சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

இவற்றில் மஞ்சள் மற்றும் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை மட்டும் முதல்லயே வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

அம்பாளிடம் உள்ளன்போடு உங்கள் வீட்டுக்கு நல்ல வரன் (மருமகளோ அல்லது மருமகனோ) அமைந்து வர வேண்டும் என பிரார்த்தனை பண்ணுங்க.

இதை ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்து வரலாம். இந்த மஞ்சள்களுடன் மற்ற பொருள்களையும் சேர்த்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ளலாம். இந்தப்பொருளைத் தயார் பண்ணி தாம்பாளத்தில் கொட்டி அதை மறுபடியும் பூஜை அறையில் வையுங்கள். இதன் மேல் மோதிர விரலைப் பயன்படுத்தி உ என்று பிள்ளையார் சுழி போடுங்கள்.

ஓம் சக்தி என்று அதில் எழுதுங்கள். அப்புறம் உட்கார்ந்து அந்த மஞ்சள் மேல் கை வைத்து ஓம் சக்தி ஓம் சக்தி என்று பிரார்த்தனை செய்யுங்கள். 108 முறை ஓம் சக்தி என்று சொன்னாலே போதும். இந்த மஞ்சள் புனிதமான மஞ்சளாக நீ தரிக்கக்கூடிய மஞ்சளாக மாற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இது அந்த மஞ்சளுக்கு மேலும் சக்தியை ஊட்டும். பின்னர் ஒரு பேப்பர் அல்லது நல்ல துணியை வைத்து அதை மூடி விடுங்கள்.

woman pray to god
woman pray to god

செவ்வாய்க்கிழமை குரு ஓரையில் இந்த மஞ்சளை செய்து வைக்கலாம். குரு பகவானின் அருளும் கூட கிடைக்கும். இது செவ்வாய் தோஷத்தையும் போக்க வல்லது. இதை சிறிய டப்பாக்களில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம். கன்னிப்பெண்கள் கண்டிப்பாகத் தேய்த்துக் குளிக்கலாம். சுமங்கலிப்பெண்கள் தினமும் இதைப் பயன்படுத்தலாம்.

அம்பாளிடம் வேண்டிக் கேட்டுக்கொள்ளுங்கள். 48 நாள்கள் குளித்து வந்தால் உங்கள் முகமே ஒரு களையான மாற்றத்தைத் தரும். ஆண் குழந்தைகளுக்கு குண்டு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் இவை இரண்டையும் அரைத்து சந்தனத்துடன் இந்த மஞ்சளைக் கலந்து தினமும் குழைத்து வைத்து வந்தால் நல்ல மனைவி அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

வழிபாட்டுக்குரிய மாதம் ஆடி. அதனால் தான் இந்த மாதத்தில் கல்யாணம் செய்து கொள்வது இல்லை. இது போல் செய்து வந்தால் இந்த மஞ்சள் மிகப்பெரிய பாதுகாப்பு ரட்சையாக வந்து நம்மைக் காத்தருளும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...