நம் தமிழகத்தில் ஏராளமான தனியார் பள்ளிகள் அதிகமாக காணப்படுகின்றன. ஆனால் பல தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானம் காணப்படுவதில்லை. அதனால் தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துகின்றனர். இது குறித்தான வழக்கு இன்றையதினம் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அதன்படி அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்த அனுமதித்தது எப்படி? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விளையாட்டு மைதானம் இல்லாத தனியார் பள்ளிக்கு எப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டது? என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
தனியார் பள்ளியின் பகுதிநேர ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் உழவர்சந்தை, பட்டாசு கடைகள் வைக்கப்படுவதாகவும் வழக்கில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மைதானத்தை பகுதி நேரமாக பயன்படுத்த அனுமதி உத்தரவை திரும்பப் பெறவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மைதானத்தில் வேலி அமைத்து பராமரிக்க உத்தரவிட்டு வழக்கு ஜனவரி 2-வது வாரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.