அனைவருக்கும் வீடு திட்டம்: இன்று முதல் கணக்கெடுப்பு துவக்கம்!!

தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்துவதையடுத்து அனைத்து ஊராட்சிகளிலும் வீடுகள் கணக்கெடுப்பு திட்டம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் குடிசையில் வாழும் வீடு, நிலைத்தன்மையற்ற வீடு மற்றும் வாழ தகுதியற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்களில் விவரங்களை கணக்கெடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!

அதே போல் வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் மற்றும் வனத்துறையில் வசிக்கும் குடும்பங்கள் ஊரகப்பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா பெற்று வீடு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கிராம ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியவர்கள் குழுக்களாக ஆய்வு நடத்த வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அனைத்து ஊராட்சிகளில் இன்று முதல் கணக்கெடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்: ரூ.1,620 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!

அதோடு கணக்கெடுப்பு பணிகளை வருகின்ற 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், ஆய்வு செய்யும் பணியை அடுத்த மாதம் 9-ம் தேதி பட்டியலை இறுதி செய்யும் பணியை வருகின்ற 17-க்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.