News
வீட்டு வாடகை கேட்டவர் வெட்டி கொலை: சென்னையில் இளைஞர் கைது

சென்னையில் வீட்டு வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரை அவரது வீட்டில் குடியிருந்த இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை குன்றத்தூரில் குணசேகரன் என்பவர் வீட்டில் அஜித் என்பவர் வாடகைக்கு இருந்தார். அவர் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கடந்த நான்கு மாதங்களாக வாடகை கொடுக்க வில்லை என தெரிகிறது
இதனை அடுத்து உரிமையாளர் குணசேகரன் அஜித்திடம் வாடகை கேட்டு அவ்வப்போது தொந்தரவு செய்து கொண்டிருந்தார். இன்று காலை அவர் அஜித்திடம் வாடகை கேட்டதாகவும் வாடகை கொடுக்க முடியாவிட்டால் காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது
இதனை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அஜித் அரிவாளை எடுத்து வீட்டு உரிமையாளரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து வீட்டு உரிமையாளரை வெட்டி கொலை செய்த அஜித் என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து கொண்டு வருகிறது. வீட்டு வாடகை கேட்டதற்காக வீட்டின் உரிமையாளரை இளைஞர் ஒருவர் கொலை செய்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
