இனிமேல் குடும்பத் தலைவிகள் பெயரில் வீடு: முதல்வர் அறிவிப்பு !!
இன்று சர்வதேச மகளிர் தினமானது தமிழகங்கமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திமுக மகளிர் அணியின் இணையத்தளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர்:
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்று உள்ளதாகவும் தேர்தலில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்நிலையில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததாகவும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ஒதுக்கீடு சார்பில் வழங்கப்படும் வீடுகள் அனைத்தும் இதற்குமேல் குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்குவதில் திமுக சிறந்து விளங்குவதாகவும் பேருந்துகளில் இலவச பயணம் செய்ததால் பெண்கள் அடையும் மகிழ்ச்சியானது எனது வாழ்நாளின் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
