தலைகீழாகக் கட்டப்பட்ட வீடு. அதிசயித்துப் போன மக்கள்!
ஒரு மனிதனின் பெரும் ஆசையாக இருப்பது சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதுதான்.. தாங்கள் வாழும் வீட்டினை தனித்துவமாக கட்ட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு.
அந்த வகையில் கொலம்பியாவில் வீட்டினைத் தலைகீழாகக் கட்டி அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட பொதுமக்கள் அதிசயித்துப் பார்த்து வருகின்றனர்.
கொலம்பியாவின் தலைநகரான பொக்கோவிட்டா அருகே உள்ள குவாத்விட்டாவில்தான் இந்த வீடானது கட்டப்பட்டுள்ளது.
அதாவது பிரிட்ஜா என்ற நபர் இந்த வீட்டினைக் கட்டியுள்ளார். பிரிட்ஜா ஆஸ்திரியாவைச் சார்ந்தவர். ஆஸ்திரியாவில் பிரிட்ஜா தலைகீழாகக் கட்டப்பட்ட வீடு ஒன்று கட்டப்பட்டு இருந்ததைக் கண்டுள்ளார்.
அதனையடுத்து தானும் அதுபோல் வீடு கட்ட வேண்டும் என்று எண்ணி அதற்கான திட்டங்களை வகுத்துள்ளார்.
அதன்பின்னர் கட்டிட வரைபடக் கலைஞர்களை அணுகி வீட்டைக் கட்டுவதற்கானப் பிளானைப் போட்டுள்ளார்.
பிரிட்ஜா கட்டியுள்ள தலைகீழ் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாக பொதுமக்கள் எது எப்படியோ வீடியோ பார்த்தாலே தலை சுத்துது எப்படி வாழப் போகிறார்களோ என்று கிண்டலடித்து வருகின்றனர்.
