ஹோட்டல் ஸ்டைல் வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது இத்தனை சுலபமா?!

என்னதான் சமையலில் புலி என்றாலும், சில உணவுகளை சமைக்கும்போது கோட்டை விடுவோம். அவ்வாறு சரியா சமைக்க வராமல் சொதப்பும் உணவில் மோர் குழம்பும் ஒன்று. பார்த்து செய்தாலும் ஹோட்டலில், கல்யாண வீடுகளில் செய்வதுபோல இல்லை என வீட்டில் சொல்வார்கள். கீழ்க்காணும் முறைப்படி மோர்க்குழம்பு செய்தால் ருசியும் மணமும் வீட்டையே தூக்கும். பாராட்டும் கிடைக்கும்.

34cb61ecab20f22a007757502b3bf517

தேவையான பொருட்கள் :

புளித்த தயிர் – 1 கப்
வெண்டைக்காய் – 10
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு…

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 1
தேங்காய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

செய்முறை :

வெண்டைக்காயை கழுவி தேவையான அளவில் வெட்டிக்கொள்ளவும். தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும். வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

வாணலியை சூடாக்கி, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்டைக்காயை போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, வெண்டைக்காய் நன்கு வேகும் வரை வதக்கி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் தயிர் ஊற்றி கிளறி, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி விடவும். பின்பு அதில் மஞ்சள் தூள், வெண்டைக்காய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

மணமும், சுவையும்கொண்ட ஹோட்டல் ஸ்டைல் வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி!!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.