ஹோட்டல் ஸ்பெஷல் செட்டிநாடு முட்டை குருமா இனி வீட்டிலையயும்.. எப்படி செய்யலாமுன்னு தெரியுமா?

வீட்டில் செட்டிநாடு முட்டை குருமா செய்யலாமா…

செய்ய தேவையான பொருட்கள் :

முட்டை – 4
வெங்காயம் – 1
தக்காளி – 1
மிளகாய் தூள் -அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு

வறுத்து அரைக்க:

இஞ்சி -சிறிய துண்டு
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – கால் மூடி
கருவேப்பிலை – தேவைக்கு ஏற்ப
எண்ணேய் – 1 தேக்கரண்டி
தனியாதூள் – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 4 பல்

பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாணுக்கு டும் டும் டும் முடிந்தது! யாருலா கல்யாணத்துக்கு போனாங்க தெரியுமா?செய்முறை :

முட்டையை வேக வைத்து 2 ஆக நறுக்கி கொள்ளவும். ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டியவை அனைத்தையும் வறுத்து கொள்ளவும், பின்பு ஆற வைத்து பொருட்களை நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை ,வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.கொத்தமல்லி தூவி இறக்கவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews