ஹோட்டல் பூரி போல புசுபுசுனு உப்பலா வீட்டுலயும் பூரி சுடணுமா? அப்போ இப்படி பண்ணி பாருங்க..

நம்ம ஹோட்டலுக்கு போனாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது பூரி தான். பூரி சொன்னாலே போதும் குழந்தைகள் முகத்தில் பூரி போல உப்பலான சிரிப்பு வரும். வேண்டும் வேண்டும் என விரும்பி சாப்பிடுவார்கள்.

குழந்தைகளுக்கு நாம் எப்போதும் சத்து நிறைந்த கோதுமை மாவில் தான் பூரி செய்ய வேண்டும். மைதா மாவுகளில் செய்து கொடுக்க கூடாது . அது அவர்களின் உடல்நிலைக்கு கேடு விளைவிக்கும். அதன் பின்
எண்ணெய்யில் பொரித்த பொருட்களை சாப்பிடும் போது மந்தமாக இருக்கும் அதனால் பூரி சாப்பிட பிறகு வெதுவெதுப்பான நீர் குடித்தால் நலலது.

உப்பலா புசுபுசுனு பூரி செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு : 2 டம்ளர்

ரவை : 1 1/2 தேக்கரண்டி

சர்க்கரை : 1 தேக்கரண்டி

தண்ணீர் : தேவையான அளவு

உப்பு : சுவைக்கு ஏற்ப

சமையல் எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை :

கோதுமை மாவு, ரவை, தண்ணீர், 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக, மிருதுவாக பிசைந்து கொள்ளவும் .

சர்க்கரை சேர்க்கும் போது பூரி பொன்னிறமாக வரும். ரவை சேர்க்கும் போது நீண்ட நேரம் பூரி உப்பலாக இருக்கும்.

மாவு விரவி 30 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அடுப்பில் பாத்திரம் வைத்து பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், தேய்த்த மாவை ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.

பூரி மாவை சிறிதளவு மந்தமாக தேய்த்து கொள்ளவும் , லேசாக தேய்த்தால் பூரி சப்பாத்தி போல வரும். மேலும் எண்ணெய் நன்றாக சூடாக இருக்க வேண்டும்.எண்ணெயில் போட்ட ஒரு சில நொடிகளில் சிறிது அழுத்தி விடவும்; அப்போது பூரி நன்றாக உப்பி வரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.