Connect with us

ஹோட்டல்களில் சர்வீஸ் சார்ஜா? உடனடியாக இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!!-மத்திய அரசு

Service charge

செய்திகள்

ஹோட்டல்களில் சர்வீஸ் சார்ஜா? உடனடியாக இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!!-மத்திய அரசு

பல இடங்களில் சர்வீஸ் சார்ஜ் என்று அழைக்கப்படுகின்ற சேவை வரி அதிக அளவு விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் உணவகங்கள் பலவற்றிலும் இந்த சேவை வரியானது நடைமுறையில் உள்ளன.

இதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்படி உணவகங்களிலும் ஹோட்டல்களிலும் வாடிக்கையாளர்களுக்கான பில்களில் சேவை வரி விதிக்க கூடாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

உணவகங்கள், ஹோட்டல்கள் தாங்கள் வழங்கும் சேவைகளுக்கு தாங்களாகவே சேவை கட்டணம் விதிக்கக்கூடாது என்று உணவகங்களுக்கு எச்சரிக்கை விதித்து மத்திய அரசு கூறியுள்ளது.

உணவகம், ஹோட்டல்களிலும் சேவை கட்டணம் விதித்தால் உடனடியாக 1915 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் கூறியுள்ளது. உணவு கட்டணத்துடன் சேர்த்து ஜிஎஸ்டியும் சேர்க்கப்படுவதால் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக உணவகங்களுக்கு எச்சரிக்கையாக கூறியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் பயனை அடைவார்கள் என்பது தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top