அதிவேகமாக வந்த பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து; பெண் உட்பட மூவர் பலி!

ஒசூர் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து வளைவில் திரும்பும் போது எதிரே மற்றொரு பேருந்து வந்ததால் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த நாகமங்கலம் பகுதியிலிருந்து SKMS என்னும் தனியார் பேருந்து பெங்களூர் செல்ல கெலமங்கலம் என்னுமிடத்தில் சென்ற போது, முருகர் கோவில் வளைவில் அதிவேகமாக வந்ததாகவும், எதிரே மற்றொரு பேருந்து வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து SKMS பேருந்து இடதுபுறமாக இருந்த ராகி வயலில் இறங்கி விபத்துக்குள்ளானது.

சாலையிலிருந்து பள்ளத்தில் இறங்கி 400 மீட்டர் ஓடிய பேருந்தின் முன்பக்க இரண்டு டயர்களும் வண்டியை விட்டு கழன்று சென்றது. இதில் பெங்களூரு பேருந்தில் பயணித்த ஜெக்கரி கிராமத்தை சேர்ந்த யசோதா (45) என்கிற பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

மேலும் 20 பேர் படுகாயங்களுடன் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த கெலமங்கலம் போலீசார் மற்றும் அப்பகுதி பொது மக்கள்மீட்கும் பணியில் ஈடுபட்டனர்

முதற்கட்ட விசாரணையில் பெங்களூர் சென்ற பேருந்து அதிவிரைவாக சென்றதும் என தெரியவருகிறது மேலும் எதிர் திசையில் வந்த தர்மபுரி நோக்கி சென்ற பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.