கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறின என்பதும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையிலும் கமல்ஹாசன் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

kamal SRMC

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment