Entertainment
நடிகர் விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் அதிர்ச்சி அறிக்கை!
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சற்று முன் தனியார் மருத்துவமனை விவேக்கின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விவேக் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் கொரொனா வைரஸ் தடுப்பூசி போட்டதற்கும் அவரது உடல்நிலை கோளாறுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் விவேக் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவருக்கு ஆஞ்சியோகிராம், எக்மோ உள்பட ஒருசில முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
நடிகர் விவேக் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவேக் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்
