அபாய கட்டத்தை தாண்டிவிட்டாரா ரிஷப் பண்ட்; மருத்துவமனையில் இருந்து வந்த தகவல்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இன்று காலை புத்தாண்டு கொண்டாடுவதற்காக தாயாரை பார்க்க காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பனிமூட்டம் காரணமாக கார் திடீரென சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

மேலும் ரிஷப் பண்ட் மற்றும் அவருடைய டிரைவர் காரை விட்டு கீழே இறங்கி பின்னர் கார் தீப்பற்றி எரிந்து சாம்பலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், அவருக்கு எலும்பு முறிவு எதுவும் இல்லை என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இன்னும் சில நாட்களில் ரிஷப் பண்ட் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.