சாதாரண பொம்மை, பேயாக மிரட்டிய வா அருகில் வா திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவு

பொதுவாக திகில் சினிமாக்களில் பேய்ப்படங்களில் ஆவியானது மனிதர்கள் உடலில் நுழைந்துதான் பழிவாங்கும் என்று காலம் காலமாய் பேய்ப்படங்களில் காண்பித்து வந்தார்கள்.

ஆனால் சில வருடங்கள் முன்பு வந்த யாவரும் நலம் திரைப்படத்தில் ஆன்மாவனது எந்த ரூபத்திலும் வந்து பழிவாங்கும் யாரையும் மிரட்டும் என சொல்லப்பட்டது.

அது நுழைவதற்கு மனித உடல்தான் தேவை என்ற நிலை கிடையாது எதிலும் நுழையும் என்ற அடிப்படையில் சொன்ன கருத்து எல்லோருக்கும் பிடித்திருந்தது.

ஆனால் அந்த படத்திற்கு முன்பே வா அருகில் வா என்ற திரைப்படம் வந்து விட்டது அதிலும் இது போல கருத்துதான் கூறப்பட்டது.

அப்பாவி பெண்ணான வைஷ்ணவி புகுந்த வீட்டில் மிகுந்த கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

இவரின் ஆன்மாவானது அங்குள்ள பொம்மையின் உள்ளே புகுந்து பலரையும் பழிவாங்கும்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. கலைவாணன் கண்ணதாசன் இயக்கிய இந்த படம் திகில் பட விரும்பிகளுக்கு மிக பிடித்த படமாக இருந்தது .

இன்றுடன் இப்படம் வெளியாகி 31 ஆண்டுகள் நிறைவடைகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.