தொழில்நுட்பம்
ஹானர் நிறுவனத்தின் வி40 லைட் ஸ்மார்ட்போன் வெளியீடு!!
ஹானர் நிறுவனத்தின் வி40 லைட் ஸ்மார்ட்போன் குறித்த தகவல் சீனாவில் விரைவில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள தகவல்கள்:
வண்ணம்: ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன் கருப்பு, பச்சை மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும்.
டிஸ்பிளே: ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன் 6.57 இன் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 2340×1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டு இருக்கலாம்.
சிப்செட் வசதி: இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 800 யூ சிப்செட் வசதியினைக் கொண்டு இருக்கலாம்.
மெமரி அளவு: இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டு இருக்கலாம்.
கேமரா அமைப்பு: ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ், 32எம்பி செல்பி கேமரா கொண்டு இருக்கலாம்.
பேட்டரி அளவு: இது 3800 எம்ஏஎச் பேட்டரி, 66 வாட்ஸ் பேட்டரி அளவினைக் கொண்டு இருக்கலாம்.
இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயங்குவதாக இருக்கலாம்.
இணைப்பு ஆதரவு: இது இரட்டை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1, வைஃபை, யூஎஸ்பி டைப்சி போர்ட் கொண்டு இருக்கலாம்.
