Connect with us

டிக்டாக்கால் நடந்த கொலைவெறி தாக்குதல்: 3 பேர் கைது!!

a

தமிழகம்

டிக்டாக்கால் நடந்த கொலைவெறி தாக்குதல்: 3 பேர் கைது!!

சென்னையில் டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் டிக்டாக் மூலம் தகராறு ஏற்படுவது வாடிக்கையாக நடக்கிறது. இது தொடர்பாக தமிழக காவல்துறையினர் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவர் டிக்டாக் மூலம் பல பிரபலமான வீடியோக்களை போடுவதில் வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது நண்பர்களுடன் அதே பகுதியில் இருசக்கர வாகனத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சஞ்சய்யை வழிமறித்த கும்பல் அவர் மீது சரமாறியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் விக்னேஷ்வரன், குணசேகரன் மற்றும் பள்ளி மாணவர் உட்பட 3 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top