வீட்டிற்கே வரும் தடுப்பூசி: சென்னை மக்களுக்கு சிறப்பு சலுகை

2e1dac19c4b5d499fdb0e1c5f81ec638

சென்னையில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்காக சிறப்பு சலுகையாக வீட்டிற்கே வந்து தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ வசிக்கும்‌ 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின்‌ கருப்பிடங்களுக்கே சென்று கோவிட்‌ தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்‌ கோவிட்‌ தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும்‌, தொற்று பரவலை கட்டுப்படுத்தவும்‌ மாநகராட்சியின்‌ சார்பில்‌ பல்வேறு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தமிழக மக்கள்‌ அனைவருக்கும்‌ கோவிட்‌ தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்‌ என உத்தரவிட்டுள்ளார்கள்‌. அதனடிப்படையில்‌, தமிழக அரசு கொரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள்‌, சுகாதார நிலையங்கள்‌ மற்றும்‌ தடுப்பூசி சிறப்பு முகாம்கள்‌ மூலம்‌ செலுத்தி வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்‌ உள்ள மாற்றுத்திறனாளிகள்‌, உயர்‌ இரத்த அழுத்தம்‌ மற்றும்‌ நீரிழிவு நோயினால்‌ பாதிக்கப்பட்டுள்ள நபர்கள்‌, கர்ப்பிணி தாய்மார்கள்‌, பாலூட்டும்‌ பெண்கள்‌ மற்றும்‌ காசநோய்‌ பாதித்த நபர்களை பாதுகாக்கும்‌ வகையில்‌ மாநகராட்சியின்‌ சார்பில்‌ சிறப்பு கவணம்‌ செலுத்தப்பட்டு அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள்‌ செலுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்‌ இதுநாள்‌ வரை 254228 நபர்களுக்கு முதல்‌ தவணை தடுப்பூசியும்‌, 10,54,704 நபர்களுக்கு இரண்டாம்‌ தவணை தடுப்பூசியும்‌ என மொத்தம்‌ 35,68,932 கோவிட்‌ தடுப்பூசிகள்‌ செலுத்தப்பட்டுள்ளன.

மேலும்‌, குடிசைப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ பொதுமக்களுக்கு சிறப்பு கவனம்‌ செலுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 13.08.2021 முதல்‌ ஒரு வாரக்‌ காலத்தில்‌ 315 கோவிட்‌ சிறப்பு தடுப்பூசி முகாம்கள்‌ நடத்தப்பட்டு 24,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத்‌ தொடர்ந்து, 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கோவிட்‌ தடுப்பூசி செலுத்தும்‌ வகையில்‌ அவர்களின்‌ ஒருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில்‌, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்‌ உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கோவிட்‌ தடுப்பூசி செலுத்த 044-2538 4520 மற்றும்‌ 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில்‌ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தால்‌, அவர்களின்‌ இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்‌.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment