Connect with us

இல்லம் தேடி கல்வித் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் !! – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..

anbil 1200

தமிழகம்

இல்லம் தேடி கல்வித் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் !! – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..

இல்லம் தேடி கல்வித் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் !! – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..

இல்லம் தேடி கல்வி திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க போவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

கும்பகோணம் அடுத்த திருமன குடியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற 11 மாதக்காலத்தில் 68 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

இல்லம் தேடி கல்வி திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க போவதாக தெரிவித்த அமைச்சர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவ, மாணவியர்கள் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே தங்கியதால் அவர்களின் பொதுஅறிவு மற்றும் கல்விகற்கும் திறன் குறைந்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதனை சீர் செய்வதற்கு இல்லம் தேடி கல்வி திட்டம் அவசியம் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top