கருப்பு என ஒதுக்கியவர்கள் கண்களில் விரல்விட்டு ஆட்டிய ஹாலிவுட் நாயகி ஏஞ்சலினா ஜோலி

தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாநாயகிகளை ரசித்த நாம் உலக ஹீரோயினான ஏஞ்சலினா ஜோலியையும் கொண்டாடத் தவறியதில்லை. தமிழ் சினிமாவில் வேற்று மொழியில் இருந்து ஆதிக்கம் செலுத்திய கதாநாயகிகள் தான் அதிகம். ஆனால் ஹாலிவுட் இறக்குமதி என்று பார்த்தால் எமி ஜாக்சனை சொல்லாம்.

பெயரிலேயே ஏஞ்சலைக் கொண்ட ஏஞ்சலினா ஜோலி மிக அழகான ஹாலிவுட் நடிகைகளில் ஒருவர். உதட்டழகுக்கு பெயர் போனவர். பாரம்பரிய நடிகர் குடும்பத்தைச் சார்ந்த ஏஞ்சலினா பிறப்பால் கத்தோலிக்கர் ஆயினும் இந்து மத , புத்த மத வழிபாட்டையே அதிகம் பின்பற்றுகிறார்.

கருப்பால் ஒதுக்கிய ஹாலிவுட்

தன்னுடைய 16 வயதில் காதலரை பிரிந்துவிட்டு வாழ்வில் முன்னேற முயற்சி செய்தார். பல்வேறு ஆடிசன்களில் கலந்து கொண்டாலும் அவரின் கருப்பு நிறத்தை காரணம் காட்டி வாய்ப்பை மறுத்தனர். கோபம் , மன அழுத்தம் அதிகமாக அடிக்க போதை மருந்துகளையும் எடுத்துக் கொண்டு மனநிலையும் பாதிக்கப்பட்டார். அடிக்கடி கைகளை கத்தி அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இரு முறை தற்கொலை முயற்சி செய்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

மிரட்டும் தங்கலான் டீசர் : பிதாமகன், ராவணன், ஐ படத்தை எல்லாம் பின்னால் தள்ளிய சீயான் விக்ரம்

அவருடைய அண்ணனின் தயாரிப்பு படங்களில் துணைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஹேக்கர்ஸ் படம் ஏஞ்சலினா ஜோலியை பிரபலமாக்கியது. 2000 ஆண்டு காலக்கட்டத்தில் ஏஞ்சலினா ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையானர்.

 

3 குழந்தைகளை பெற்ற ஏஞ்சல் 3 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். அகதிகளுக்கு ஏராளமான நிதியுதவிகளை செய்துள்ளார். ஆப்கன் அகதிகளுக்கு 10 லட்சம் டாலர் நிதியுதவி செய்துள்ளார். உலகம் முழுக்க உள்ள அகதிகளுக்கு நிதியுதவியும் சட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். கம்போடிய நாட்டில் தேசிய பூங்காவை தத்தெடுத்து காடுகளை பராமரிக்கிறார். 60000 ஹெக்டேர் நிலம் வாங்கி அங்கு காடுகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவரது சேவையை பாராட்டி கம்போடிய அரசு விருதும் குடியுரிமையும் வழங்கியுள்ளது.

அதிசயமே அசந்து போகும் அழகு : 50 வயதிலும் 20 வயது இளமையில் ஜொலிக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்

இதுவரை அவர் 3 கோல்டன் குளோப் விருதுகளையும் ஒரு ஆஸ்கர், ஒரு பாப்தா விருதையும் பெற்றுள்ளார். இவருடைய மனிதநேயத்திற்காக உலக அரங்கில் பலமுறை கவுரவிக்கப்பட்டுள்ளார். கருப்பு என்று ஒதுக்கப்பட்ட பெண் அதே திரையில் நம்பர் 1 இடத்தை பிடித்து இன்று பல்லாயிரம் மக்களுக்கு வாழ்வளிக்கும் தாயாக வலம் வருகிறார் ஏஞ்சலினா ஜோலி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.