Connect with us

தமிழகத்தைப் போல அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி; மாணவர்களுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமுறை!

school closed2

செய்திகள்

தமிழகத்தைப் போல அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி; மாணவர்களுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமுறை!

தமிழகத்தைப் போல அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி; மாணவர்களுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமுறை!

எதிர்பாராத விதமாக மீண்டும் இந்தியாவில் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இதன் விளைவாக ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் மாணவர்களுக்கு இன்பமான பல முக்கிய அறிவிப்புகளையும் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நம் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை தினமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் திருப்புதல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல் வெளியானது.

இந்தநிலையில் புதுச்சேரியில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பானது தமிழகத்தை போலவே காணப்படுகிறது. அதன்படி புதுச்சேரியில் இந்த மாதம் முடிவு வரை அதாவது ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை பள்ளிகளுக்கு மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top